• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவன பிராண்ட் தூதரா பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி நியமனம்

March 2, 2026

இந்தியாவின் முன்னணி பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனமானது, புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதியை பிராண்ட் தூதராக அறிவித்துள்ளது.

அத்துடன் ‘சுனியே பரோசா, அப்னோ ஸா’ என்ற ஒருங்கிணைந்த பிராண்ட் கேம்பைன் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்ற ஒரு ஆளுமையையும், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்ட ஒரு பிராண்டையும் இந்த கூட்டணி ஒன்றிணைக்கிறது.

பங்கஜ் திரிபாதியின் எதார்த்தமான ஆளுமை, பிராண்டின் முக்கிய வாக்குறுதியான “தனிப்பட்ட மற்றும் நிம்மதியளிக்கக்கூடிய நம்பிக்கை” என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

இந்தக் கூட்டணி குறித்து எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் முதன்மைச் செயல் அதிகாரியுமான நவீன் சந்திர ஜா கூறுகையில்,

“இந்தியக் குடும்பங்கள் தங்களின் ஆரோக்கியம் மற்றும் நிதிப் பாதுகாப்பு குறித்த தேவையில் விழிப்புணர்வு அடைந்து வருகின்றனர். அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகள் மற்றும் பெருகி வரும் சுகாதார விழிப்புணர்வால், விரிவான ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது ஒரு விருப்பத் தேர்வு என்பதைத் தாண்டி அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.‘சுனியே பரோசா, அப்னோ ஸா’ பிரச்சாரம் மற்றும் பங்கஜ் திரிபாதியுடனான எங்கள் கூட்டணி மூலம், முன்கூட்டியே உடல்நலப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.

அத்துடன் காப்பீட்டுச் சேவையை எளிமையாகவும், அணுகக்கூடியதாகவும், இந்தியக் குடும்பங்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்பவும் மாற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் பலப்படுத்துகிறோம்,” என்றார்.இந்தத் தொடர் கேம்பைனின் ஒரு பகுதியாக, குடும்பங்களைப் பாதுகாப்பதில் ஒரு நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக எஸ்.பி.ஐ. விளங்குகிறது எனும் வாக்குறுதியை வலியுறுத்தும் வகையில் புதிய ‘ஹெல்த் இன்சூரன்ஸ்’ விளம்பரப் படத்தை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உண்மையான உத்தரவாதம் என்பது அன்றாட கவனிப்பு, பொறுப்புணர்வு மற்றும் அசைக்க முடியாத ஆதரவின் மூலம் கட்டமைக்கப்படுகிறது என்ற நம்பிக்கையை இந்தப் பிரச்சாரம் பிரதிபலிக்கிறது.இந்த விளம்பரப் படத்தில், பங்கஜ் திரிபாதி தனது குடும்பத்தின் தேவைகளை உணர்ந்து, அன்றாட செயல்கள் மூலம் அக்கறையை வெளிப்படுத்தும் ஒரு தூணாகக் காட்டப்படுகிறார். அவரது பொறுப்புணர்வு மற்றும் அரவணைப்பு ஆகியவை இந்தியக் குடும்பங்களின் உணர்வுகளோடு ஒத்துப்போகின்றன.

மிக முக்கியமான தருணங்களில் குடும்பங்களுக்கு உறுதுணையாக நிற்கும் எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸின் பங்கினை இந்த விளம்பரம் அழகாக காட்சிப்படுத்தியுள்ளது. இந்த விளம்பரப் படத்தை டிபிடபிள்யூஏ லிண்டாஸ் நிறுவனம் உருவாக்கி இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க