• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எல்லாம் முடிந்துவிட்டது – நடிகர் விஜய் சேதுபதி

October 19, 2020 தண்டோரா குழு

இலங்கையில் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.

இதற்கிடையில்,முத்தையா முரளிதரன் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர் ஆகையால் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பலரும் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்தனர்.இந்நிலையில், எனது வாழ்வை தழுவி எடுக்கும் 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டாம் என முரளிதரன் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து, அந்த அறிக்கையை சுட்டிக்காட்டி விஜய் சேதுபதி நன்றி வணக்கம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,முதலமைச்சர் தாயார் மறைவையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விஜய் சேதுபதி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதியின் 800 படம் குறித்து கேள்வி எழுப்பினர்.அதற்கு நன்றி வணக்கம் என்று தெரிவித்தாலே எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தம் என கூறினார்.

மேலும் படிக்க