• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எய்ம்ஸ் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

June 15, 2017 தண்டோரா குழு

எய்ம்ஸ் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய அளவில், எய்ம்ஸ் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 28ம் தேதி நடத்தப்பட்டது.இத்தேர்வில் மொத்தம், 3,64,242 பேர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 2,84,737 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.

நுழைவு தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் தேர்வு முடிவுகளை aiimsexams.org என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

மேலும் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு வரும் ஜூன் 3ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், கலந்தாய்வு முடிந்து வகுப்புகள் ஆகஸ்டு 1-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுத் தவிர முதல்முறையாக, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்வி மையத்தில், 100 மாணவர்களை சேர்க்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க