• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி செய்கிறார் – சரத்குமார்

May 13, 2019 தண்டோரா குழு

சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சூலூர் அரசு மருத்துவமனை முன்பு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் உங்கள் வேட்பாளராக அதிமுக வேட்பாளராக பண்புள்ள படித்த விவசாய குடும்பத்தைச் சார்ந்த கந்தசாமியை
வேட்பாளர்களாக நியமித்துள்ளார்கள். அவர் வதம்பச்சேரி பகுதியில் ஊராட்சி தலைவராக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி பத்தாண்டுகாலம் செயல்பட்டு உள்ளார். அவர் மீது மக்கள் வைத்துள்ள அபிப்பிராயத்தையும் நம்பிக்கையும்தான் வெளிக்காட்டுகிறது

தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுகிறார்.

23ஆம் தேதி ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறுகிறார். அவர் எப்பொழுதும் ஆட்சிக்கு வர முடியாது.இன்று புரட்சித்தலைவி இல்லையே என்ற வருத்தம் நமக்கு இருந்தாலும் கடந்த 2 ஆண்டு காலமாக புரட்சித் தலைவர் அவர்களின் பாதையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிறந்த முறையில் மக்களுக்காக செயல்படுத்தி வருகின்றார். என்றால் அது மிகை அல்ல. மக்களுக்காக நான் என்று புரட்சித்தலைவி பயணிப்பார்களாம் அதேபோல எடப்பாடி சாமி அவர்கள் மக்களைப் பற்றி சிந்தித்து எந்த நேரத்திலும் மக்களுக்காக எதைச் செய்யலாம் எந்த திட்டங்களை வகுத்து செயல்படுத்தலாம் என்று அடிப்படையில் சிறந்த முறையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்

உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் 60 ஆண்டுகாலம் நடைபெறாமல் இருந்த அத்திக்கடவு அவினாசி திட்டத்தை செயல்படுத்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதற்காக 250 கோடி ஒதுக்கி 2020ஆம் ஆண்டுக்குள் அது முடிவடையும் என்று கூறியுள்ளார். இப்படித்தான் வீராணம் திட்டத்தை கொண்டு வர முடியாது என்று கூறினார்கள் எம்ஜிஆர் அவர்கள் கொண்டு வந்தார். அத்திக்கடவு அவினாசி திட்டத்தை கொண்டு வர முடியாது என்று கூறியவர்கள் எல்லாம் எடுத்துக்காட்டாக சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி உள்ளவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் சுட்டிக் காட்டுகின்ற வேட்பாளர் படித்தவர் பட்டதாரி விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் விவசாயிகளுக்காக சிறப்பாக உழைக்கின்ற இயக்கம் அதிமுக இயக்கம் விவசாயிகளுக்கு ஒன்று என்றால் அது அதிமுகவின் ஆட்சி தான் அழகு திட்டங்களை செயல்படுத்தி கொடுக்கும். 234 தொகுதிகளிலும் அதிமுக நிற்கவைத்து பெரும்பான்மையை நிரூபிக்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி உண்டாக்கவேண்டும் அடிப்படையில் செயல்படுத்தினார்கள். திருமண உதவித்தொகை 25 ஆயிரம் ரொக்கமும் பட்டதாரி பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் பெண்களுக்காக பல திட்டங்களை மகப்பேறு விடுப்பு குழந்தை பிறந்த பிறகு அதற்கு தாய்வழி சீதனமாக நிதி கல்வியைக் கொண்டு மாணவ மாணவிகள் சிறப்பாக கல்வி கற்க வேண்டுமென முதல் முறையாக ஒரு மாநிலத்தில் கல்விக்காக மாணவிகளுக்கு மடிக்கணினி இலவசமாக தந்த அரசு அதிமுக அரசு என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அதுபோல் பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமும் கொடுக்கப்பட்டது ஏழைத் தொழிலாளர்களுக்கு 2000 கோடி ரூபாய் தருவேன் என்று உறுதியளித்து கொடுத்துக் கொண்டிருந்தார் இந்த தேர்தல் முடிந்த பின் அதை மக்களுக்காக கொடுக்கக்கூடிய அரசு எடப்பாடி அரசு ஆகவே மக்களுக்காக நாம் என்ற புரட்சித்தலைவி அவர்கள் கூறியுள்ளார். சட்டமன்ற வளாகத்திற்கு வரும் பொழுதும் சரி சட்டமன்றத்திற்குள் வந்த பொழுதும் சரி எந்த திட்டத்தை இந்த மக்களுக்காக செயல்படுத்த வேண்டும் என்று 110 விதியின் கீழ் திட்டத்தை அறிவிக்கப் போகிறார் என்று காத்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே மக்களை சிந்திப்பவர்கள் தான் ஆட்சியில் இருக்க வேண்டும் அப்படிப்பட்ட ஆட்சிதான் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சி இந்த ஆட்சி தொடர வேண்டும் என்றால் இந்த நான்கு தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என பதவி சுகத்தை அனுபவிப்பார்கள் தான் தேர்தலை உருவாக்கியிருக்கிறார்கள். ஸ்டாலின் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி சம்பாதித்தவர்கள் அவர்கள்தான் அராஜகத்தின் உச்சகட்டம் அவர்கள் சாதாரண பிரியாணி கடை சென்று அடிதடி நடத்துகிறார்கள். யாரு போலீசாரை எதிர்த்துப் பேசுகிறார்கள் அவதூறாக பேசுகிறார்கள் என்றால் யார் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கின்ற மாநிலம் என்று சொன்னால் அது தமிழகம் தான். அந்த ஆட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

மேலும் படிக்க