April 21, 2017
தண்டோரா குழு
ஜெ அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் எம்.ஜி.ஆர்- ஜெயலலதா- திமுக என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா எம்ஜிஆர் தீபா அம்மா பேரவை என்ற இயக்கத்தை தொடங்கினார். தீபா பேரவையில் இருந்த மாதவன் அதில் இருந்து வெளியேறினார். பின் தீபாவுக்கு மாதவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாதவன் புதிய கட்சி துவங்குவார் என கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்த பின் பத்திரிக்கையாளர்கள் சந்தித்தார் மாதவன்.
அப்போது, எம்.ஜி.ஆர்- ஜெயலலதா- திமுக என்ற புதிய கட்சி துவங்குவதாக அறிவித்தார். பின்னர், எம்.ஜெ.டி,எம்.கே. என்ற பேனரை கட்டி தனது புதியக்கட்சியின் பெயரையும், கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார்.
மாதவன் கட்சியின் கொடியில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவம் வைக்கப்பட்டுள்ளது.