• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எமதர்மன் ,சித்திரகுப்தன் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

February 5, 2021 தண்டோரா குழு

கோவையில் 32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு எமதர்மன், சித்திரகுப்தன் வேடமிட்டு வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

கோவை மாநகர காவல்துறை துறை சார்பில் தினந்தோறும் பல்வேறு இடங்களில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று கோவை சாயிபாபாகாலனி நான்குமுனை சந்திப்பில் எமலோகத்தில் ஆஃபர் எனும் விழிப்புணர்வை போக்குவரத்து உதவி ஆணையர் ராஜ் கண்ணா தலைமையில் எமதர்மன், சித்திரகுப்தன், உலகத்தில் உயர்ந்த மனிதன், எம்ஜிஆர் உள்ளிட்ட பல்வேறு வேடமிட்டு வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

சாலை விதிகளை மீறுவதன் மூலம் ஏற்படும் உயிரிழப்புகள், தலைக்கவசம் அணிய வேண்டிய அவசியம், சிக்னலை மதிக்காமல் செல்வது, வேகமாக சாலையில் பயணிப்பது, ஒன்வேயில் பயணிப்பதன் ஆபத்துகள் குறித்து எமதர்மன்,சித்திரகுப்தன் வேடமிட்டு சாலையில் உயிரிழப்புகள் தவிர்க்க வேண்டிய வழிகள் குறித்தும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.இதில் போக்குவரத்து காவலர்கள் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாகன விதிமுறைகளை குறித்து கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும் படிக்க