• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என் மகள் திருமணத்துக்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு நன்றி: ரஜினி நெகிழ்ச்சி அறிக்கை

February 12, 2019 தண்டோரா குழு

தனது மகள் மகள் திருமணத்துக்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த 2010ஆம் ஆண்டு தொழிலதிபர் அஷ்வினை திருமணம் செய்தார். பின்னர் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதற்கிடையில், சவுந்தர்யாவுக்கும், நடிகரும் தொழிலதிபருமான விசாகனுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் நேற்று திருமணம் செய்துகொண்டனர். தனது மகள் திருமணத்தையடுத்து ரஜினி பல்வேறு அரசியல் தலைவர்கள் பிரபலங்களை சந்தித்து அழைப்பு விடுத்தார். சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் சௌந்தர்யா – விசாகன் திருமணதிற்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின், வைகோ, கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும், திரைத்துறைப் பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

இந்நிலையில் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி நடிகர் ரஜினிகாந்த். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “என் மகள் சௌந்தர்யா, மணமகன் விசாகன் திருமணத்திற்கு வருகைதந்து வாழ்த்திய மரியாதைக்குரிய மாண்புமிகு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், எதிர்க்கட்சித் தலைவர் திரு ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், திரு முகேஷ் அம்பானி குடும்பத்தினர், திரு திருநாவுக்கரசர், திரு அமர்நாத், திரு கமலஹாசன், மற்றும் நண்பர்கள், உறவினர்கள், திரையுலக பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், காவல் துறை நண்பர்கள் என திருமண விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

மேலும் படிக்க