• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என் சம்மதம் இல்லாமல் என்னை ஏன் பெத்தீங்க பெற்றோரை நீதிமன்றத்திற்கு இழுக்கும் மகன் !

February 7, 2019 தண்டோரா குழு

என் சம்மதம் இல்லாமல் என்னை ஏன் பெத்தீங்க என்று பெற்றோர் மீது இளைஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்தவர் ரபேல் சாமுவேல். இவர் பூமியில் மனிதர்களை பிறப்பிப்பதற்கு எதிரான சிந்தாந்தத்தில் நம்பிக்கையுடைவர். ஆங்கிலத்தில் இவரை ஆண்டி நாட்டலிஸம் (Anti-Natalism) என்று அழைக்கப்படுவர். அண்டினாட்டாலிசம் என்றால் மக்கள் குழந்தைகளை பெற்று கொள்ள கூடாது அப்படி குழந்தை பெற்று கொள்வதால், அந்த குழந்தைகள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்’ என ரபேல் கூறினார். இவருக்கு சமூக வலைதளத்தில் பலரும் ஆண்டினாட்டாலிசம் ஆதரவாக பல கருத்துகளை பதிவிட்டுள்ளனர். சாமுவேல் சமீபத்தில் தன்னை பெற்றதற்காக தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு கொடுக்க போவதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அவரின் இந்த காரணம் மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.

அந்த பதிவில், நான் எனது பெற்றோரை நேசிக்கிறேன். ஆனால் அவர்கள் தங்களது சுகத்துக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் தான் என்னை பெற்றெடுத்திருக்கிறார்கள். யாரோ இருவர் சுகம் அனுபவிப்பதற்காக நான் ஏன் பாதிக்கப்பட வேண்டும். நான் ஏன் அவர்களுக்கு உழைத்து சம்பாதிக்க வேண்டும். இதனால் எனது சம்மதம் இல்லாமல் என்னை பெற்றெடுத்த எனது பெற்றோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ரபேல் சாமுவேலின் அறிவிப்பு குறித்து அவரது தாய் கவிதார் கர்நாட் சாமுவேல் தனது பேஸ்புக் பதிவில்,

எங்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற என் மகனின் முடிவை நான் பாராட்டுகிறேன். நானும் என் கணவரும் வழக்கறிஞர்கள்தான். அவரின் சம்மதத்தைப் பெற்று அவரை எப்படி பெற்றுக்கொள்ள முடியும் என்பதை சாமுவேல் நீதிமன்றத்தில் தெளிவாக விளக்கினால் நாங்கள் எங்கள் தவறை ஒப்புக்கொள்கிறோம். மேலும் பூமிக்கு பாரமாக உள்ளோம் என்ற அவரின் கருத்து மற்றும் அதற்கு எதிராகத் துணிச்சலாக அவர் போராடுவதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். விரைவில் சாமுவேல் இந்த உலகில் மகிழ்ச்சியைத் தேடி கண்டுபிடிப்பான்” எனப் பதிவிட்டுள்ளார்.

ரபேல் சாமுவேலின் இந்த பேஸ்புக் பதிவு உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க