• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

என்.ஐ.ஏ விசாரணை தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகள் மாநகர காவல் ஆணையரிடம் மனு

June 14, 2019 தண்டோரா குழு

கோவையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு என்.ஐ.ஏ அதிகாரிகள் உக்கடம், கரும்புக்கடை, அன்பு நகர் உள்பட 7 இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து 6 பேரை கைது செய்தனர். அதில் சிலருக்கு இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக அறிக்கையையும், அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் செல்போன்கள், மடிக்கணினிகள், பென்டிரைவ் உள்பட பல்வேறு பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக தமிழக போலீசாரும் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 க்கும் மேற்பட்ட இசுலாமிய அமைப்பினர் இன்று கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளரை சந்தித்து மனு அளித்தனர்

அம்மனுவில், என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் ISIS என்ற அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறி நள்ளிரவு நேரம் அல்லது அதிகாலை நேரம் என அத்துமீறி நடந்து கொள்கின்றனர். தேவை யில்லாமல் ஊடகங்களுக்கு தவறான தகவல்கள் தருகின்றனர். கோவையில் ஒரு சமூக நல்லிணக்கம் அமைய வேண்டும் என இசுலாமிய அமைப்புகள் நடந்து வருகின்றன. பொது சமூகத்தின் மத்தியில் ஒரு வெண்டாத் சூழ்நிலையை ஏற்படுத்த அரசியல் காரணங்களுக்காக இந்த nia அமைப்பு நடந்து கொள்கிறது என கூறப்படுள்ளது.

கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பின் சார்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மனிதநேய ஜனநாயக கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத், ஏகத்துவ முஸ்லிம் ஜமாத், JAQH,மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, WPI, ஆகியோர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் கமிஷனரை சந்தித்து மனு அளித்தார்கள்

மேலும் படிக்க