• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

என்.எஸ்.எஸ், என்.சி.சி மாணவர்களை ஒருங்கிணைத்து கல்லூரி, பள்ளிகளில் போதை பொருள் எதிர்ப்பு அமைப்பு

August 12, 2022 தண்டோரா குழு

தமிழக முதலமைச்சர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை துவங்கி வைத்து போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழியினை மாணவர்களுடன் எடுத்து கொண்டதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் சமீரன் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழியினை அனைத்து மாணவ, மாணவியர்களும் எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஆட்சியர் சமீரன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

கோவை மாவட்டத்தில் 1000 மேற்பட்ட மாணவ மாணவியர்களுடன் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்று விழிப்புணர்வு மற்றொன்று அமலாக்கம். கோவை மாவட்டத்தில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து போதை பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கடந்த வாரம் துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு கல்லூரிகள், பள்ளிகளிலும் போதை பொருள் எதிர்ப்பு அமைப்பு உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்.எஸ்.எஸ் மற்றும் என்.சி.சி மாணவர்களை ஒருங்கிணைத்து இந்த அமைப்பு செயல்படும்.

மேலும் புகையிலை தொடர்பான பொருட்களை விற்பனை செய்வதை தடை செய்ய உணவு மற்றும் பாதுகாப்புத் துறையினால் 478 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு கடந்த வருடத்தில் ரூ.24 லட்சத்திற்கு மேல் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜூலை 31 வரை ரூ.13 லட்சத்திற்கு அபாரதம் விதிக்கப்பட்டு புகையிலை தொடர்பான பொருட்களை விற்பனை செய்த கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும். மேலும் போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் படிக்க