• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என் இதயத்தை திருடிவிட்டாள் காவல் நிலையத்தில் புகாரளித்த இளைஞர் !

January 9, 2019 தண்டோரா குழு

காதலி தன் இதயத்தை திருடிவிட்டதாக காதலன் ஒருவன் காவல்நிலையத்தில் புகாரளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏதாவது ஒரு பொருளை காணவில்லை என்றால் காவல்நிலையத்திற்கு சென்று புகாரளிப்பது வழக்கம். தனுஷ் நடித்த தேவதையை கண்டேன் படத்தில் நடிகர் தனுஷ் தன் காதலி மீது புகாரளித்ததை போல மகாராஷ்டிராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் காதலி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவர் காதலிக்கும் பெண் தன் இதயத்தை திருடிவிட்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இளைஞர் அளித்த புகாரைகண்டு காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சட்டப்படி இந்த பிரச்சனைக்கு விடைகண்டுபிடிக்க முடியாததால் என செய்வது என்று திகைத்த காவலர்கள் இளைஞர் சமாதானப்படுத்த முயன்றனர்.

எனினும் இளைஞர் காவல்நிலையத்தை விட்டு செல்ல மறுத்தார் பின்பு சில மணி நேரம் அங்கேயே இருந்து பரபரப்பை ஏற்படுத்தியதாக காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார். இதுபோன்ற சில விசித்திரமான புகார்களை காவல்துறை சந்திக்கிறது இதுபோன்ற புகார்களால் தங்களது நேரம் வீணாகிறது என காவல் அதிகாரி வருத்தம் தெரிவித்தார்.

மேலும் படிக்க