October 13, 2020
தண்டோரா குழு
மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழக வெற்றிக்குச் சொந்தமான பஞ்சாலைகள் தமிழகத்தில் 12 இடங்களில் இயங்கி வருகிறது. இதில் சுமார் 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கின்றனர்.கொரோனா ஆமாங்க மார்ச் மாதம் மூடப்பட்ட ஆலைகளை திறந்திட வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் கோவை காட்டூர் பகுதியில் உள்ள என்டிசி ஆலையின் முன்பு வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு கொடியினை ஏந்தி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அலுவலகத்தினுள் சென்று அவர்களது கோரிக்கை போராட்டத்தை நடத்த திட்டமிட்ட பொழுது ஆலையின் முன் கதவு மூடப்பட்டிருந்ததால் ஆலையின் முன்பு மத்திய அரசை கண்டித்தும் ஆலைகளை உடனடியாக திறக்க வேண்டும் என்றும் ஆலைகளை திறக்கும் வரை தொழிலாளர்களுக்கு முழு சம்பளத்தை வழங்கிட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அப்போது காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனை தொடர்ந்து ஆலையின் நிர்வாகத்தினர் வருகின்ற 16 ம் தேதி மத்திய தொழிலாளர் இணை ஆணையருடன் இணைந்து கூகுள் ஜூம் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை கூறுவதாக தெரிவித்ததால் தற்காலிகமாக இந்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.