• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எனது தந்தையை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் – காசாளர் பழனிசாமியின் மகன் ரோகின் குமார் புகார்

May 4, 2019 தண்டோரா குழு

எனது தந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் தற்கொலை செய்யவில்லை, அவரை திட்டமிட்டு படுகொலை செய்துள்ளனர் என லாட்டரி மார்டினின் காசாளர் பழனிசாமியின் மகன் ரோகின் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மார்டின் குரூப் நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வந்த பழனிச்சாமி என்பவர் நேற்று காரமடை அருகே குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், நீதிபதி முன்னிலையில் சடல விசாரணை நடத்த உத்தரவிடக்கோரியும், இறந்தவரின் மகன் ரோகின் குமார் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் மனு அளித்தார். மேலும் மருத்துவக்கல்லூரி மருத்துவர் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உடற்கூறு ஆய்வு செய்வதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

எனது தந்தை தற்கொலை செய்யவில்லை என்றும் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மரணத்தில் மர்மம் உள்ளது. மார்டின் நிர்வாகத்தில் வேலை செய்யும் உயர் அதிகாரிகள் இருவர் மீது சந்தேகம் உள்ளது. வருமானவரி துறை அதிகாரிகளால் என் தந்தையை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். வருமானவரி துறை அதிகாரிகள் கடுமையாக தாக்கியதும், கடுமையான வார்த்தைகள் பேசியதும் என் கண்களால் பார்த்தேன் எனவும் புகார் தெரிவித்தார்.வருமானவரி துறையில் இருந்து எங்கள் வீட்டிற்கு 7 பேர் வந்தனர். அதில் ராஜன் என்பவர் என் தந்தையின் கன்னத்தில் அடித்தார். எனது வீட்டில் இருந்து எவ்வித ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றப்படவில்லை என்றார்.

மேலும், எனது மூன்று கோரிக்கை வைத்து உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்றும் அதுவரை உடலை வாங்கமாட்டோம். தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் என் தந்தையின் உடலில் காயம் உள்ளது, எனவே தண்ணீரில் மூழ்கி இறந்தவருக்கு தலையில் மூக்கில் காயம் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் சுட்டிக் காட்டினார். மனுவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நாகராஜனிடம் வழங்கியதாகவும், இம்மனுவை பெரியநாயக்கன்பாளையம் காவல் கண்கானிப்பாளரிடம் வழங்கி அவர் மூலம் ஆர் டி ஒ விசாரணை நடத்த நிதிபதி அறிவுறுத்தியுள்ளாதாகவும் கூறினார்.

மேலும் படிக்க