• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எனக்கு வீடு தரவில்லையென்றாலும் பரவாயில்லை கக்கன் வாரிசுகளுக்கு அரசு வீடு தரவேண்டும் – நல்லக்கண்ணு

May 11, 2019 தண்டோரா குழு

எனக்கு வீடு தரவில்லையென்றாலும் பரவாயில்லை கக்கன் வாரிசுகளுக்கு அரசு வீடு தரவேண்டும் என மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணு கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இதுநாள் வரை அரசு ஒதுக்கியிருந்த வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையில் வீட்டை காலி செய்ய கூறி நோட்டீஸ் விட்டுள்ளதையொட்டி அவர் அரசு ஆணையை மதித்து வீட்டை காலி செய்து, வேறு வாடகை வீட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக அரசின் இந்த செயலுக்கு எதிராக தங்களது அதிருப்தி மற்றும் கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த நல்லகண்ணு,

உடனடியாக வீடு காலி செய்யும்படி அரசு கேட்டதால், மன உளைச்சலுக்கு ஆளானேன். எனக்கு வீடு இல்லை என்றாலும், கக்கன் வாரிசுகளுக்கு அரசு உடனடியாக வீடு வழங்க வேண்டும். எனக்காக குரல் கொடுத்த தலைவர்களுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க