• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எனக்கு திருநாவுக்கரசை தெரியாது – காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார்

March 21, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக சிபிசிஐடியிடம் நேரடியாக ஆஜராகி எழுத்துப்பூர்வ விளக்கமளித்துள்ளதாக தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பியது தொடர்பாக கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மயூரா ஜெயகுமார் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் பிப்ரவரி 12ஆம் தேதி பொள்ளாச்சியில் இல்லையென்றும், கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் தந்தையுடன் திருநாவுக்கரசு கோவையில் தன்னை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததாக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிபிசிஐடி சம்மன் அனுப்பியதாக கூறியவர்,டெல்லி,சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு செயல் தலைவராக பதவி உயர்வு அடைந்த பிறகு கோவை வந்த தன்னை,தொழிலதிபர்கள்,வியாபாரிகள் என பல தரப்பினர் சந்தித்தாகவும்,அப்போது பொள்ளாச்சி காங்கிரஸ் உறுப்பினர் ராஜசேகர் என்பவர் எனக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக திருநாவுக்கரசு அவரது தந்தை கனகராஜுடன் வந்ததாக சொன்னதை சிபிசிஐடியிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளதாகவும்,தேவைப்பட்டால் அதற்கான ஆதாரங்கள் அளிப்பேன் என்றார்.

கட்சி அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானோர் சந்தித்த நிலையில்,தனக்கு திருநாவுக்கரசை தெரியாது என்றும்,சிபிசிஐடி புகைப்படம் காண்பிக்கும் போதுதான் திருநாவுக்கரசை தெரியும் என்றவர்,இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கும் தனக்கும் எந்த விதத்திலும் தொடர்பு கிடையாது என்றும்,தன்னை பொருத்தவரை தான் இந்த வழக்கில் சாட்சியாக பார்ப்பதாக தெரிவித்தார்.இதுதொடர்பாக கட்சி தலைமையிடம் விளக்கமளித்து விட்டதாகவும்,மக்களிடம் தான் விளக்கமளிக்க வேண்டும் என்றவர்,இரு பெண்கள் தனக்கு உள்ளதை சுட்டிக்காட்டியவர்,இதிலிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவேன் என்றார்.

பின்னர்,பொள்ளாச்சி வழக்கில் முக்கிய நபரான திருநாவுக்கரசை அழைத்து வந்த ராஜசேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“காங்கிரஸ் உறுப்பினராக இருந்து வரும் நிலையில்,செயல் தலைவராக மயூரா ஜெயகுமார் கோவை வந்தபோது,பொள்ளாச்சியில் இருந்து பல ஆண்டுகளாக காங்கிரசில் இருந்த கட்சியினர் சுமார் 30 பேர் தன்னுடன் வந்ததாகவும்,அதில்,திருநாவுக்கரசு தனது தந்தையுடன் காலை 10 மணிக்கு வந்து 12 மணி வரை கட்சி அலுவலகத்தில் இருந்து சால்வை போடப்பட்டதாகவும்,2 மணிக்கு மதிய உணவு முடித்து விட்டு கிளம்பி விட்டதாக தெரிவித்தார்”.

மேலும் படிக்க