• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதிமுக அரசைக் தோற்கடிப்பதற்கு மக்கள் தயாராக உள்ளனர் – நா.கார்த்திக்

November 20, 2019

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நேரத்தில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைப்பது பெருத்த சந்தேகத்தைக்
ஏற்படுத்துவதாகவும், பல குளருபடிகள் இந்த அரசு செய்து இருப்பதாகவும் திமுக கோவை சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, வடகோவை திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தைக தனியார் நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக 26 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்ததைக் கண்டித்தும் ,கோவை மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார சீர்கேடுகளுக்கு தீர்வு காண வருகின்ற 28 ஆம் தேதி திமுக சார்பில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நேரத்தில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைப்பது பெருத்த சந்தேகத்தைக் ஏற்படுத்தியுள்ளதாகவும், சொத்து வரி உயர்வைக் முழுமையாக குறைப்பதற்கு இந்த அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அவர் வேண்டுகோள் வைத்தார்.தேர்தல் வரும் நேரத்தில் பல்வேறு கட்ட அறிவிப்புகளை இந்த அதிமுக அரசு அறிவிப்பதாக குற்றச்சாட்டிய அவர், பல குளருபடிகளை இந்த அரசு செய்து இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதிமுக அரசைக் தோற்கடிப்பதற்கு மக்கள் தயாராக இருப்பதாகவும், ஜனநாயக முறைப்படி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு கூட கோவையில் காவல்துறையினர் அனுமதி மறுப்பதாகவும்,கோவையில் உள்ளாட்சி துறை அமைச்சரின் அத்துமீறல் அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்பேட்டியின்போது, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, நந்தக்குமார், பகுதி கழக செயலாளர் கோவை லோகு, பகுதி கழக பொறுப்பாளர்கள் சேதுராமன், சண்முகசுந்தரம், மார்கெட் மனோகரன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க