• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எந்த தடைகள் வந்தாலும் 2500 ரூபாய் மக்களுக்கு சென்று சேரும் – எஸ்.பி.வேலுமணி

January 4, 2021 தண்டோரா குழு

ஸ்டாலின் எப்போதும் முதல்வராக முடியாது என மு.க.அழகிரி கூறியுள்ளதாக அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

அப்போது அவர் பேசுகையில்,

கோவை மாவட்டத்தில் 10,11,845 குடும்பத்திற்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றது.கொரொனா காலத்தில் மக்கள் நெருக்கடியில் இருப்பதால் தமிழக முதல்வர் 2500 ரூபாயாக தொகையை உயர்த்தி இருக்கின்றார்.பொங்கல் தொகுப்பில் முதலில் கரும்பு துண்டு கொடுக்கப்பட்டது. இப்போது முழுகரும்பு கொடுக்க முதல்வர் உத்திரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள 2.6 கோடி அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றது. ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது 100 ரூபாய் கொடுத்து இந்த பரிசு தொகுப்புக திட்டத்தை துவக்கி வைத்ததாக குறிப்பிட்ட அவர் மக்களுடன் இருந்து முதல்வரானவர் என்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எளிமையாக இருக்கின்றார் என புகழாரம் சூட்டினார்.2500 ரூபாய் மக்களுக்கு வழங்குவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற ஒரு கும்பல் இருக்கின்றது எனவும் எந்த தடைகள் வந்தாலும் 2500 ரூபாய் மக்களுக்கு சென்று சேரும் எனவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி,கோவை மாவட்டத்திற்கு 269.83 கோடி ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் எப்போதும் முதல்வராக முடியாது என அவரது அண்ணன் முக அழகிரி தெரிவித்துள்ளார் எனவும் கூறினார்.

மேலும் படிக்க