• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எடப்பாடி அணியில் உள்ள ஸ்லீப்பர் செல்கள் விரைவில் வெளி வருவார்கள்

August 30, 2017 தண்டோரா குழு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அணியில் உள்ள ஸ்லீப்பர் செல்கள் விரைவில் வெளி வருவார்கள் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நாங்கள் முதல்வராக்கிய எடப்பாடி பழனிசாமியே எங்களுக்கு துரோகம் இழைக்கும் போது, மத்திய அரசையோ, பாரதிய ஜனதாவையோ குறை கூறுவது கண்ணியமாக இருக்காது. துரோகிகளை வீட்டுக்கு அனுப்புவதே எங்களது முதல் வேலை.

ஆளுநர் நல்ல முடிவெடுப்பார் என காத்திருக்கிறோம். பதவி, சுயலாபத்திற்காக செயல்படும் பழனிசாமி, தமிழக மக்களுக்கு எப்படி நல்ல முதலமைச்சராக இருக்க முடியும்.மத்திய அரசுக்கு அவர் தவறான தகவல்களை கொடுத்து கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்பதே எம்.எல்.ஏக்களின் கோரிக்கையாக உள்ளது.

ஊழல் ஆட்சி என கூறிய பன்னீர்செல்வத்துடன் கைகோர்த்துள்ளனர். தொண்டர்களை பற்றி கவலைப்படாமல் முதலமைச்சர் பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.

பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே உள்ளது. துரோகம் செய்தவர்களை விட மாட்டோம்.பதவி ஆசையில் நாங்கள் எதுவும் செய்யவில்லை.முதலமைச்சர் அணியில் உள்ள ஸ்லீப்பர் செல்கள் விரைவில் வெளிவருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க