• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை” வரலாற்று கண்காட்சியில் நோன்பு திறந்த இஸ்லாமியர்கள்

April 11, 2023 தண்டோரா குழு

கோவை வ உ சி மைதானத்தில் “எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை” வரலாற்று கண்காட்சியை இன்று மாலை காணவந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் மைதானத்தில் நோன்பு திறந்தனர்.

கோவை வ உ சி மைதானத்தில், “எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை” வரலாற்று சிறப்பு மிக்க புகைப்பட கண்காட்சி கடந்த 7 ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்த கண்காட்சியை தினமும் ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்து வருகின்றனர். தினமும் மாலையில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில்,இந்த கண்காட்சியை பார்வையிட்ட கோவை கரும்புக்கடை, உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் இன்று மாலை வந்தனர்.நோன்பு காலம் என்பதால் வ உ சி மைதானத்திலேயே மாலையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் நோன்பு திறந்தனர்.

மேலும் படிக்க