• Download mobile app
10 May 2024, FridayEdition - 3012
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எங்கள் ஆட்சியை ஜெயலலிதா மேலிருந்து பார்த்துக்கொண்டு இருக்கின்றார் -ஓபிஎஸ்

April 5, 2019 தண்டோரா குழு

ஒழுங்காக ஆட்சி நடத்துகின்றனரா என ஜெயலலிதா மேலிருந்து பார்த்துக்கொண்டு இருக்கின்றார் என துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

கோவை சாய்பாபா காலனி பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

சி.பி.ராதாகிருஷ்ணன்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படுவார்.நாடாளுமன்ற தேர்தலில் தீர்ப்பு வழங்கும் இடத்தில் மக்கள் இருக்கின்றீர்கள்.மத்தியில் ,மாநிலத்தில் ஆட்சியில் இருந்த போது மக்கள் பிரச்சினைகளை தீரத்து வைத்தவர்கள் யார் என பார்த்து அவர்களை தேர்ந்தெடுங்கள். காங் – திமுக கூட்டணி 10 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்தது , மத்தியில் ஆட்சியில் இருந்த போதும் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த போதும் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை மத்தியில் ஆட்சியில் இருந்த போது பாழாய் போன சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வந்தார்கள்.கடலில் மணல் அள்ளினால் அங்கு மணல் நகர்ந்து மீண்டும் மூடும்.
அதனால் பலன் இருக்காது என்றும் ஜெயல்லிதா சொன்னார்கள். 40 ஆயிரம் கோடியை கொண்டு போய் கடலில் போட்டார்கள்.சேது சமுத்திர திட்டம் பாழாய்போனது.2007 காவிரி நடுவர் மன்ற தீரப்பிற்கு அரசிதழில் வெளியிட வேண்டும் என்று ஜெ வலியுறுத்தினார், ஆனால் அப்போது அதிகாரத்தில் இருந்த அவர்கள் செய்யவில்லை.2013 ல் இறுதி தீர்ப்பினை போராடி அரசிதழில் ஜெயலலிதா கொண்டு வந்தார். இப்போது காங்கிரஸ், திமுக மீண்டும் கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்ற வந்துள்ளார்கள் என தெரிவித்தார்.

மேலும்,அதிமுக ஆட்சியில் செய்துள்ள பணிகளை பட்டியலிட்ட அவர், தற்போது 6 லட்சம் வீடுகள் தமிழகம் முழுவதும் கட்டப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.கோவையில் மட்டும் 1.25 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்படு்கின்றது.2023 க்குள் தமிழகம் குடிசை பகுதி இல்லாத மாநிலமாக மாற்றப்படும் ,15 லட்சம் குடிசை பகுதிகள் கணக்கிடபட்டு அவை கான்கீரிட் வீடுகளாக மாற்றப்பட்டு வருகின்றது.
திமுக தலைவர் ஸ்டாலின் கோவை, திருப்பூர் பகுதிகளில் அவதூறான பிரச்சாரத்தக முன் வைக்கின்றார்.உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி மீது அவதூறாக பேசி வருகின்றார். அதை மக்கள் நம்ப மாட்டார்கள். கொம்பாதி கொம்பன் வந்தாலும் இந்த அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. ,ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என நினைக்கின்றார் எனவும் அது முடியாது.ஸ்டாலின் ஜோசியர் பேச்சை கேட்டு கொண்டு கலர் கலராக சட்டை போட்டு நடந்து பார்த்தார், டீ குடித்து பார்த்தார் ஒன்றும் நடக்கவில்லை. அதிமுக இயக்கத்தில் ஒரு தொண்டன் தலைமை பொறுப்பிற்கு வர முடியும்.காங்கிரஸ், திமுகவில் தொண்டர்களால் தலைமை பதவிக்கு வர முடியாது. தெய்வமாக இருந்து ஜெயல்லிதா கட்சியின் செயல்பாடுகளை பார்த்து கொண்டு இருக்கின்றார்.ஒழுங்காக ஆட்சி நடததுகின்றனரா என ஜெயலலிதா மேலிருந்து பார்த்துக்கொண்டு இருக்கின்றார்.

தேர்தல் முடிந்தவுடன் நீதிமன்ற வழக்கை முறியடித்து மக்களுக்கு 2000 ரூபாய் வழங்கும் பணியை தொடர்வோம். கடைகளில் பிரியாணி சாப்பிட்டால், புரோட்டா சாப்பிட்டால் திமுகவினர் காசு கொடுப்பதில்லை வன்முறை கலாச்சாரத்தை கொண்டு வருகின்றார்கள் ஜல்லிகட்டு நடத்த உதவியவர் பிரதமர் மோடி. அவர், இப்போது எங்களுக்கு போட்டியாக கோவையில் வேலுமணி ஜல்லிகட்டு நடத்துகின்றார்.
வலிமையான பாரதம் அமைக்க மோடியால் மட்டுமே முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க