• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எங்கள் அணியில் எந்த குழப்பமும் இல்லை – நிதி அமைச்சர் ஜெயக்குமார்

April 29, 2017 தண்டோரா குழு

எங்கள் அணியில் எந்த குழப்பமும் இல்லை, நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயார் என்று தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் எந்த குழப்பமும் இல்லை. தமிழக அமைச்சர்கள் தனித்தனியாக கூட்டம் நடத்துவதாக கூறுவது அப்பட்டமான பொய். இரு அணிகள் இணைய பேச்சு வார்த்தைக்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.

ஞாயிற்றுக்கிழமை தவிர பொதுமக்களின் கோரிக்கைகளை கட்சியினர் மூலம் மனுக்களாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் தினமும் பெற்று வருகிறார்கள்.கட்சி தொண்டர்களிடமும் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் மனுக்களை பெற்று வருகிறோம்.என்றார் நிதி அமைச்சர் ஜெயக்குமார்.

மேலும் படிக்க