September 15, 2020
தண்டோரா குழு
தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் உயிரை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ” கும்கி ” யானை பாகன்களுக்கு போதிய உணவு, இருப்பிடம் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் இதுவரை 12 யானைகள் பல்வேறு காரணங்களுக்காக உயிரிழந்துள்ளன. இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் குண்டடிபட்ட காயத்துடன் காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்தது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவல் அறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர் யானைக்கு பிடித்தமான உணவுகளின் மூலம் யானைக்கு சிகிச்சையளித்து வந்தனர்.
யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் யானைக்கு கும்கி யானைகளின் உதவியுடன் பிடித்து சிகிச்சையளிக்க வனத்துறை மருத்துவர்கள் முடிவு செய்தனர்.இந்த நிலையில் கோவை மாவட்டம் சாடிவயல் முகாமில் இருந்து சுயம்பு,வேங்டேஷ் என்ற இரு யானைகள் கொண்டு வரப்பட்டன.இரு யானைகளும் தேக்கம்பட்டியை அடுத்துள்ள தனியார் எஸ்டேட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
யானைகளை பொறுத்தவரை இயற்கையோடு உள்ள பகுதிகளில் நலமோடு வாழும். ஆனால், பாகன்களின் நிலையோ கண்ணீர் வடிக்க தோணும் தங்குவதற்கு போதிய இடமோ,போதிய உணவோ செய்து தரப்படவில்லை என பாகன்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
காட்டுப்பகுதியில் பாம்புகள் வசிக்கும் பகுதியில் உயிருக்கு பயந்த நிலையில் திறந்த வெளியில் தூங்க சொன்னால் தங்களது நிலை என்னாகும் என கண்ணீர் வடிக்கின்றனர் பாகன்கள்.
இதுகுறித்து “கும்கி” யானை பாகன்கள் கூறுகையில்,
உயிரை பணயம் வைத்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தங்களுக்கு போதிய உணவு,தங்குமிடம் செய்து தரப்படுவதில்லை எனவும், காட்டுப்பகுதியில் பாம்புகள் வசிக்கும் பகுதியில் உயிருக்கு பயந்த நிலையில் திறந்த வெளியில் தூங்க சொன்னால் தங்களது நிலை என்னாகும் எனவும்,
யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் பொதுமக்களுக்கு வழங்குவது போல் நிவாரணம் வழங்காமல் கூடுதல் நிதி வழங்க வேண்டும்,குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.