• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எங்ககிட்டயும் கொஞ்சம் கேளுங்க: குழந்தைகள் சொல்லும் cute கதைகள்: களிமண் கலைக்கூடம் மூலம் கலக்கும் பெட்ரிசியா

November 24, 2023 தண்டோரா குழு

தொழில் நுட்பங்களின் வளர்ச்சி பெருகி உள்ள இந்த காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது அனைவருக்கும் சவாலான ஒன்று. இன்றைய சூழலில் தம்பதிகள் இருவரும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கே கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், குழந்தைகளிடம் பேசுவது என்பது வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில், குழந்தைகள் மனதில் உள்ள எண்ணங்களை வெளிக்கொணரும் பொருட்டு உருவாக்கப்பட்டதே இந்த “களிமண் கலைக்கூடம் சிந்தனை” என்ற அமைப்பு என்கிறார் சென்னையைச் சேர்ந்த பெட்ரிசியா..!

இதுகுறித்து அவரிடம் பேசுகையில்;

பொதுவாவே குழந்தைகள் கிட்ட கதை சொல்றதை விட, அவங்க ஒரு விஷயத்தைப் பற்றி என்ன நினைக்கிறாங்க அப்படிங்கிறத நாம தெரிஞ்சுக்க அவங்க கிட்ட இருந்து கதை கேட்கிறது என்பது கூடுதல் சுவாரசியமான ஒண்ண இருக்கும். அப்படி தன்னோட களிமண் கலைக்கூடம் அமைப்பு மூலமா பள்ளி குழந்தைகளுக்கு கதைகள், நாடகம், பாவைக்கூத்து என சொல்லிதரோம். அப்படியாக, குழந்தைகள் கிட்ட பேசும் போது அவங்க என்ன ஓட்டத்துக்கு ஏற்ப, அவங்க என்ன நினைக்கிறாங்க அப்படிங்கறத நாம தெரிஞ்சுகிட்டா மட்டும் தான் அவங்க நம்மள அவங்களுக்குள்ள ஒரு ஆளா பாப்பாங்க…! அவங்க கூட்டத்துக்குள்ள நம்ம ஒரு ஆளா ஆகணும்னா அவங்க என்ன ஊட்டத்துக்கு தகுந்த மாதிரி நம்மளும் நம்மள மாத்தணும். அதுக்கு அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு முதல்ல நமக்கு தெரியணும். அதை தெரிஞ்சுக்கற வகையில் நாங்க ஆரம்பிச்சது தான் இந்த கதை கேட்கிற concept…! அப்படியாக நாங்க சமீபத்துல சென்னை டூ மதுரை வரை சைக்கிளிங் போனோம். அந்த பயணத்தோட நோக்கமே குழந்தைகள் கிட்ட இருந்து அவங்களோட கதையை எடுக்கணும் அப்படிங்கறதுதான்.

இதுல பொதுவா குழந்தைகள் என்னென்ன கதை கேட்கிறாங்க அப்படின்னு தெரிஞ்சுக்கிட்டு அவங்க கூட பேசுறது தான் எங்களுக்கான ஒரே வழி. அப்படியாக நானும் தன்னார்வலர் குமார்ஷானும் மதுரையில் இருக்க பல பள்ளிகளுக்கு போயி குழந்தைகள் கிட்ட சுமார் 100 கதைகள் வர சேகரித்தோம். அந்தக் கதை மூலமா குழந்தைகளோட கற்பனைத் திறன வெளில கொண்டுவர நாங்க முயற்சி பண்ணினோம். இப்படியாக நாங்க இந்த முயற்சியில் ஈடுபடும் போது குழந்தைகள் என நினைக்கிறாங்க அப்படின்னு எங்களுக்கு பல விஷயங்கள் தெரிய வந்துச்சு.

பொதுவாவே நம்ம குழந்தைங்க என்ன விரும்புறாங்க அப்படின்னு நாம தெரிஞ்சுக்கணும்னா அதுக்கு ஒரே வழி அவங்கள கதை சொல்லி கேட்கலாம் அல்லது ஒரு ஓவியம் வரைய சொல்லி பார்க்கலாம். அதன் மூலமாக நமக்கு அவங்க யார நல்லவங்களா சொல்றாங்க, அவங்களோட கற்பனைல யார ஹீரோவா சித்தரிக்கிறாங்க, எதை வெற்றின்னு நினைக்கிறாங்க, அவங்களுக்குள்ள இருக்க இயக்கங்கள் வேறுபாடுகள் சந்தோஷங்கள் பிரச்சனைகள் அவன் உலகத்தை பற்றி என்ன நினைக்கிறாங்க என்பதெல்லாம் பத்தி எங்களுக்கு தெரிய வந்ததுச்சு. இந்த சிந்தனையின் அடுத்த கட்ட வெளிப்பாடு களிமண் கலைக்கூடம் திறப்பதற்கு ஆரம்பமா இருந்துச்சு. அப்படியாக ஒரு கலை மூலமா குழந்தைகளுக்கு உள்ள இருக்க எண்ண ஓட்டங்களை ஈஸியா வெளிக்கொண்டு வரமுடியும் என்பதுதான் இதன் நோக்கமே…! இதுக்காக குழந்தைகள் நலன் கருதி அரசு நடத்தும் பல வொர்க்ஷாப்பில கலந்துக்கிறோம்.

இதுல எங்களோட அடுத்த கட்ட நகர்வா அரசு பள்ளிகளில் கலை வழி கல்வி கொண்டு சேர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு இருக்கோம். குழந்தைகள் கூட இருக்கிறது நம்ம எல்லாருக்குமே பிடிச்சமான ஒரு விஷயம். அப்படி இருக்கும்போது, குழந்தைகள் கிட்ட புதுசா நாங்க அறிமுகமாகி, அவங்க கூட உட்கார்ந்து பேசி பாட்டு பாடி, கதை சொல்லி, நாடகம் பார்த்து அவங்களுடைய எண்ணங்களை தெரிந்து கொள்வது அப்படிங்கறது அந்த குழந்தையை சரியான பாதைக்கு கூட்டிட்டு போக வழி வகுக்கும் என்பதே இதன் மூலதானம் என்கிறார் பெட்ரிசியா….!

போட்டிகள் நிறைந்த இந்த காலகட்டத்தில் குழந்தைகளை புத்தகப் புழுவாக்காமல், அவர்களுக்கு பிடித்தமான துறையில் அவர்களை செலுத்தினால் அவர்களின் எதிர்காலம் சிறக்கும் என்பதில் எந்தவிதமான மாற்று கருத்துமில்லை…!

மேலும் படிக்க