• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்குவோம் -ம.நீ.ம.சிங்காநல்லூர் வேட்பாளர் மகேந்திரன் பிரச்சாரம்

March 18, 2021 தண்டோரா குழு

ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்குவோம் என கோவை சிங்கநல்லூர் வேட்பாளர் மற்றும் மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் டாக்டர் R.மகேந்திரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை சிங்கநல்லூர் 74 மற்றும் 75 வது வார்டு குடியிருப்பு மற்றும் காலனிகளில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் டாக்டர்R.மகேந்திரன் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

சிங்கநல்லூர் தொகுதி வேட்பாளர் மக்கள் நீதி மய்ய துணைத் தலைவர், டாக்டர் ஆர் மகேந்திரன் தொகுதியில் தனது பிரச்சாரத்தை மார்ச் 16ம் தேதி துவங்கினார்.74-வது வார்டின் சர்ச் சாலை, 80 அடி சாலை, பாரதி நகர், ஒலிம்பஸ் மற்றும் 75-வது வார்டின் முக்கிய பகுதிகளான பூங்கா நகர், வல்லாய் நகர், கிரெசென்ட் பள்ளி, பாத்திமா நகர், சரமேடு பிரதான சாலை, நஞ்சுண்டாபுரம், பெருமாள் கோவில் தெரு பகுதிகளில் தனது கட்சியின் சின்னமான டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்பு காலனிகளிலும், குடியிருப்பாளர்கள் நலச் சங்க அலுவலகங்களிலும், ஒவ்வொரு வீடு மற்றும் கடைகளிலும் தனது சின்னத்திற்கு வாக்களிக்க ஆதரவு திரட்டினார். இப்பகுதியின் அனைத்து தினசரி கூலி தொழிலாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களையும் சந்தித்து உரையாடினார்.வாக்கு சேகரிப்பின்போது வார்டின் அனைத்து பகுதிகளையும் மக்கள் நீதி மய்யத்தின் சின்னமான டார்ச் லைட்டினை கொண்டு ஒளிரச்செய்தனர்.

சிங்கநல்லூரில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவதாகவும், ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்குவதாகவும் உறுதியளித்தார்.சிங்கநல்லூரில் வசிக்கும் பொதுமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்து பின்பும் எந்த நேரத்திலும் பொதுமக்களுக்கு தங்களை சுலபமாக அணுக முடியும் என்ற வாக்குறுதியையும் டாக்டர்R.மகேந்திரன் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.

மேலும் படிக்க