October 20, 2020
தண்டோரா குழு
கொரோனா பரவலுக்கு பின்னர் 7வது முறையாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடர்கிறது. நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு முழுமையாக போகவில்லை என்பதை மக்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.முகவுரை இல்லாமல் வெளியே செல்வது பற்றி யோசிக்க கூட செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்வது உங்களது குடும்பம் குழந்தைகள் வயதானவர்கள் என எல்லோரையும் கடுமையான சிக்கலில் கொண்டு போய் சேர்த்து விடுவீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
உலக அளவில் மற்ற நாடுகளைவிட கொரோனா இறப்பு விகிதம் இந்தியாவில் மிகக் குறைவு தான்.இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைவோர் எண்ணிக்கை 88% ஆக உள்ளது. லாக்டவுனை அமல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு தடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 10 கோடியை கடக்க இருக்கிறது.கொரோனாவிற்கு தடுப்பூசி வரும்வரை நாம் கவனமுடன் இருக்க வேண்டும். பண்டிகைக் காலங்களில் மக்கள் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.