May 16, 2017
தண்டோரா குழு
ஊட்டி மலர் கண்காட்சியையொட்டி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
மலைகளின் அரசியான ஊட்டியில் கோடை சீசன் துவங்கி சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டு தோறும் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, ஊட்டியில் ரோஜா கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் ஊட்டியில் 121-வது மலர்க்கண்காட்சிவரும் 19-ஆம் தேதி துவங்கவுள்ளது. இதையொட்டி, நீலகிரி மாவட்டத்திற்கு ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சங்கர் உத்தரவு வழங்கியுள்ளார்.