• Download mobile app
10 May 2024, FridayEdition - 3012
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உ.பி.யில் மோடியின் பிறந்த நாள் கொண்டாடத்திற்காக ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கு செல்லவுள்ள குழந்தைகள்

September 8, 2017 தண்டோரா குழு

உத்தர பிரதேஷ் மாநிலத்திலுள்ள பள்ளி மாணவ மாணவிகள் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாடத்திற்கு பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் செப்டம்பர் 17ம் தேதி(ஞாயிற்றுக் கிழமை) கொண்டாப்படுகிறது. இந்த விழா கொண்டாடத்தின் போது, உத்தர பிரதேஷ் மாநிலம் முழுவதிலும் உள்ள சுமார் 1.6 அரசு முதன்மை கல்வி நிறுவனங்கள் அந்த கொண்டாடத்தில் பங்கு கொள்ள வேண்டுமென்று உத்தரவிடப்பட்டடுள்ளது.

“பிரதமரின் பிறந்த நாள் கொண்டாத்தின் ஒரு பகுதியாக, அந்த மாநிலத்தின் கல்வி நிறுவங்களை தத்தெடுத்த எம்எல்ஏகள்,அந்தந்த பகுதி தொடக்கப் பள்ளிகளுக்கு சென்று, மோடியின் தூய்மை இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி, மனித வள மேம்பட்டு துறை, “செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை,தூய்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் கல்வி நிறுவங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க