October 6, 2020
தண்டோரா குழு
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு ஆறுதல் கூற சென்ற கேம்பஸ் ஃப்ரண்ட் தேசிய பொருளாளர் மற்றும் நிர்வாகிகளை கைது செய்த யோகியின் UPஅரசை கண்டித்தும் கேம்பஸ் ஃப்ரண்ட் நிர்வாகிகளை உடனே விடுதலை செய்யக் கோரியும் கோவை மாவட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இன்று காலை 11.மணி அளவில் கோவை BSNL அலுவலக முற்றுகை மாவட்ட தலைவர் அபுதாஹிர் தலைமையில் நடைபெற்றது.
இதில் கேம்பஸ் ஃப்ரண்ட் தமிழ் மாநில பொதுச்செயலாளர் கா.அஷ்ரப் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாணவர்கள் திரளாக மத்திய மற்றும் உ.பி மாநில அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி BSNL அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.