• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உ.பியில் 1000 லிட்டர் மதுவை குடித்த எலிகள் !

December 28, 2018 தண்டோரா குழு

காவல் நிலையை குடோனில் பல ஆண்டுகளாக பிளாஸ்டிக் கேன்களில் பாதுகாக்கப்பட்டு வந்த சட்டவிரோதமான மதுபானங்களை எலிகள் குடித்துவிட்டதாக காலவலர்கள் தெரிவித்த சம்பவம் வைரலாகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக கடத்தப்படும் விஸ்கி, பிராந்தி, ரம் உள்ளிட்ட மதுவகைகள் பறிமுதல் செய்யப்பட்டு பரேலி மாகாணத்தில் உள்ள கண்டோன்மெண்ட் காவல் நிலைய குடோனில் வைக்கப்படும். வழக்கு பதிந்து மதுவின் சாம்பிள்கள் எடுக்கப்பட்ட பின்னர் மீதி உள்ள மதுகள் சாக்கடையில் ஊற்றப்படும். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் கடந்த 10 ஆண்டுகளாக மது சாக்கடையில் கொட்டப்படாமல் பிளாஸ்டிக் கேன்களிள் தேக்கி வைக்கப்பட்டது.

தற்போது இந்த பிளாஸ்டிக் கேன்களில் சிறிய ஓட்டைகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், எலிகள் 1000 லிட்டர் மதுவையும் ஓட்டை போட்டு உள்ளே புகுந்து குடித்துவிட்டன என காவலர்கள் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அங்கு வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க