• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உ.பியில் காவல்துறை அதிகாரியை கன்னத்தில் அறைந்த பா.ஜ.க எம்.எல்.ஏ

June 7, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ ஒருவர், போக்குவரத்து போலீசாரை அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேஷ் மாநிலத்தில் பா.ஜ.க எம்எல்ஏ ஸ்ரீராம் சோன்கர் செவ்வாய்க்கிழமை(ஜூன் 6) தனது காரில் சென்றுள்ளார். அவர் சென்ற சாலை ஒரு வழி பாதையாகும். சாலை விதிமுறைகளை மீறியதால், அவருடைய வாகனத்தை போக்குவரத்து அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். கோபம் அடைந்த அமைச்சர் காவல் துறை அதிகாரி பாபு பவான் என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு அவரை கன்னத்தில் அறைந்துள்ளார்.

போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரேம் ஷங்கர் சாஹி இதை தடுத்து நிறுத்த முயன்றார். அவரையும் எம்எல்ஏ மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர்.

“நோ என்ட்ரி போர்டு இருந்தால், யாருக்கு என்ன கவலை, அபராதம் கட்ட சொன்னால் அதை கொடுத்து விடுகிறோம்” என்று பா.ஜ,க எம்எல்ஏ ஸ்ரீ ராம் சோனகார் கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவத்திற்கு மன்னிப்பும் கேட்க மறுத்துவிட்டார்.

“ஸ்ரீ ராம் சோனகார் எப்பொழுதும் இந்த சாலையை தான் பயன்படுத்துகிறார். சாலை விதிமுறைகளை மீறுவது தட்டி கேட்டால், அடிக்கிறார்” என்று மூத்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரபிரதேஷ் ஐஜி ஜே.என்.சிங் உத்தரவிட்டுள்ளார்…

மேலும் படிக்க