• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உ.பி.யில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் கற்பழிப்பு

May 25, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் நொய்டா அருகே ஜேவர் என்ற நகரிலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவினர் ஒருவரைப் பார்க்க அதிகாலையிலேயே புலந்த்சாகர் நகரை நோக்கி காரில் 4 பெண்கள் மற்றும் ஒரு ஆண் பயணம் செய்துள்ளனர்.

அப்போது, வழியில் அவர்களது கார் சக்கரத்தில் ஏதோ மோதியது போல உணர்ந்துள்ளனர். இதையடுத்து காரிலிருந்து இறங்கி பார்த்தபோது இரண்டு டயர்கள் பஞ்சர் ஆகியிருப்பதைக் கண்டுள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் காரில் இருந்த பெண்களை கடந்த முயற்சி செய்துள்ளனர். அதனை காரில் இருந்த ஒருவர் தடுக்க முயற்சி செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை கொன்று காரில் இருந்த பெண்கள் நால்வரையும் தனியே இழுத்துச்சென்று கூட்டுபலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுக்குறித்து தகவலறிந்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். நகரின் முக்கிய சாலையில் காலையலேயே நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க