• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உழவர் சந்தையில் தீவிர வாக்கு சேகரிப்பில் கோவை மநீம வேட்பாளர் மகேந்திரன் !

March 30, 2019 தண்டோரா குழு

கோவை சிங்கநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்ய கோவை வேட்பாளர் டாக்டர் மகேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் முறையாக தற்போது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதியில் தனித்துபோட்டியிடவுள்ளது. அதைபோல் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கடந்த 24ம் தேதி கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

கோவை பாராளுமன்ற தொகுதியில் அக்கட்சியின் சார்பில் மாநில துணை தலைவர் டாக்டர் மகேந்திரன் போட்டியிடவுள்ளார். இதற்காக வேட்புமனு தாக்கல் செய்த அவர் தற்போது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். இந்நிலையில், டாக்டர் மகேந்திரன் இன்று காலை மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்குமாறு கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை, சுங்கம், ஒண்டிப்புத்தூர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இப்பிரச்சாரத்தின் போது கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் டார்ச் லைட் சின்னத்துடம் துண்டு பிரசுரம் விநியோகித்தும் டாக்டர் மகேந்திரனுக்கு வாக்கு சேகரித்தனர்.

மேலும் படிக்க