• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றும் பணியாளர்களுக்கான தேர்தல் பயிற்சி

December 24, 2021 தண்டோரா குழு

உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றும் பணியாளர்களுக்கான தேர்தல் பயிற்சி கூட்டம், மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டல அலுவலகத்தில் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான பயிற்சி கூட்டம் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் உதவித் தேர்தல் அலுவலர்களாகவும், பொறுப்பு அலுவலர்களாகவும் பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ள கோவை மாநகராட்சியின் அலுவலர்களுக்கு,மாநில தேர்தல் ஆணையத்தின் புத்தகம் மற்றும் தமிழ்நாடு பேரூராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி மன்றங்களுக்கான தேர்தல் விதிகள் 2006 ஆகியவற்றில் உள்ள வழிமுறைகளின் படி பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷர்மிளா, மாநகரப் பொறியாளர் (பொறுப்பு) ராமசாமி உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க