• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உள்ளாட்சிக்கு முன்பே சட்டசபை தேர்தல் வரவுள்ளது – ஒ.பன்னீர்செல்வம்

May 6, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. தொண்டர்கள் அனைவரும் சட்டசபை தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியினரின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் கொட்டிவாக்கத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது;

“காஞ்சிபுரம் மாவட்டத்தில் தர்மயுத்தத்தின் முதல் கூட்டத்தினை தொடங்கியிருக்கிறோம். அ.தி.மு.க. தொண்டர்களின் இயக்கம். எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை எதற்காக தொடங்கினாரோ, அந்த கொள்கைக்கு குறைபாடு ஏற்படாமல் 18 லட்சமாக இருந்த தொண்டர்களை 1½ கோடி அளவுக்கு வளர்த்து, ராணுவ கட்டுப்பாட்டுடன் ‘மக்களால் நான், மக்களுக்காக நான்’ என ஆட்சி நடத்தினார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு விடிவுகாலம் பெற, அந்த மர்ம முடிச்சை அவிழ்க்கவேண்டும். அதற்காக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என தர்மயுத்தத்தை தொடங்கினோம். தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி தடம் மாறியுள்ளது. அதனை நேர் வழியில் கொண்டு வருவதற்காக தான் இந்த தர்மயுத்தத்தின் முதல் பயணத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கியிருக்கிறோம்.

இன்று நடைபெறும் பினாமி ஆட்சியாளர்கள் அணிகள் இணைப்பு பற்றி பேச்சுவார்த்தைக்காக சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. இன்னும் சசிகலா பொதுச்செயலாளராகவும், டி.டி.வி.தினகரன் துணை பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். மக்கள் ஏமாளிகள் அல்ல. நீங்கள் நடத்துவது நாடகம் என மக்கள் கருதுகிறார்கள்.

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியைத்தான் மக்கள் நம்புகிறார்கள். இந்த கட்சி யாருடைய குடும்பத்துக்கும் சென்றுவிடாமல், தொண்டர்கள் யாருடைய வீட்டு வாசலுக்கும் சென்று நிற்கவேண்டிய சூழ்நிலை வரக்கூடாது. சுயநலத்தோடு இருக்கிறவர்கள் யாருக்கும் இந்த கட்சியில் இடம் இல்லை.

எந்த தேர்தல் முந்தி வருகிறது, எந்த தேர்தல் பிந்தி வருகிறது என்ற நிலை இருக்கிறது. முதலில் உள்ளாட்சி தேர்தல் தான் வரும் என்று நினைத்தோம். ஆனால் சட்டசபை தேர்தல் தான் வர இருக்கிறது. இங்கே இருக்கும் தொண்டர்கள் அனைவரும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்.”

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க