August 2, 2020
தண்டோரா குழு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதாரண மக்கள் முதல் திரை பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் என பலருக்கு கொரோனா தொற்று உறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்வீட் செய்துள்ளார். தொற்று உறுதியானதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ளார்