• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக வலுதூக்கும் போட்டியில் பங்கேற்று 6 பதக்கங்களை வென்ற கோவை இளைஞர்கள்

December 14, 2020 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உலக வலுதூக்கும் போட்டியில் பங்கேற்று 6 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

உலக வலுதூக்கும் கூட்டமைப்பு சார்பில் கடந்த 4ம் தேதி நாக்பூரில் உலக அளவிலான வலுதூக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர்.இப்போட்டிகளில் கலந்து கொள்ள கோவையை சேர்ந்த சாஜித் ஹூசைன் மற்றும் ரிச்சர்ட் சன் என்ற இரண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.இதில், ரிச்சர்ட் சன் ஜூனியர் 100 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இதில் டெட் லிப்ட் போட்டியில் 290 கிலோ எடையை தூக்கி உலக அளவிலான முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.

இதேபோல், சாஜித் ஹூசைன் என்ற இளைஞர் பெஞ்ச் பிரஸ் போட்டியில் கலந்து கொண்டு ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று, காமன்வெல்த்-ல் கலந்து கொள்வதே இலக்கு என்று கூறும் இந்த இளைஞர்கள், அரசு தங்களுக்கு உதவினால் சர்வதேச அளவிலான சாதனைகளை நிகழ்த்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க