• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக வனநாளை முன்னிட்டு கோத்தகிரி வன சாலையில் மாணவர்கள் தூய்மை பணி

March 21, 2019 தண்டோரா குழு

உலக வன நாளை முன்னிட்டு கோவை மேட்டுப்பாளையம் கோத்தகிரி வன சாலையில் கல்லூரி மாணவர்கள் தூய்மை பணி மேற்கொண்டனர்.

உலக வனநாளை முன்னிட்டு வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை,டாக்டர் SNS ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மேட்டுப்பாளையம் கோத்தகிரி வன சாலையில் சுற்றுலாப் பயணிகளால் வீசப்பட்ட நெகிழிகள்,தண்ணீர் பாட்டில்கள் அகற்றி தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் காட்டின் முக்கியத்துவம் பற்றியும் குப்பைகளை பற்றியும் விழிப்புணர்வு உரை நிகழ்த்தி பணியை துவக்கி வைத்தார்.உடன் மேட்டுப்பாளையம் வனச்சரகர் அலுவலர் செல்வராஜ் இருந்தனர்.பின்னர் வன சாலைபகுதிகளில் மாணவர்கள் தன்னார்வத்தோடு கலந்துகொண்டு குப்பைகளை களைந்து பாதைகளை தூய்மை செய்தனர்.

மேலும் கல்லூரி முதன்மை நிர்வாகி ராஜலட்சுமி ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டனையின் கோவை மாவட்ட ஒருகிணைப்பாளர் சிராஜ்தீன் மேட்டுப்பாளைய ஒருகிணைப்பாளர் ஜெனே நிர்வாகிகள் சாகுல்,காஜா,வாஹித் ஆகியேர் கலந்து கொண்டு தன்னார்வலர்களை ஒருங்கிணைத்தார்கள்,மாணவர்கள் உத்வேகத்துடன் குப்பைகளை அகற்றினர்.

மேலும் படிக்க