• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் துவக்கம்

October 1, 2020 தண்டோரா குழு

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. ஆரம்ப நிலையில் கண்டறியவும்,நோய் வராமல் தடுப்பு முறைகள் குறித்தும் இந்த மாதத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் 1.38 மில்லியன் பேருக்கு புதியதாகவும், 4.5 லட்சம் இறப்புகளும் மார்பக புற்றுநோயால் ஏற்படுகிறது.வளர்ந்து வரும் நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் பொதுவாகவே பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது.குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் மார்பக புற்றுநோய் ஏற்படுவது,கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.ஆயுள் நாள் உயர்வு, நகர்ப்புறமயமாதல், மேல்நாட்டு வாழ்க்கை முறைக்கு மாற்றம் போன்றவை இதற்கு காரணமாக உள்ளது என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் பி.குகன்.

ஆரம்ப நிலையிலேயே மார்பக புற்றுநோயை கண்டறிந்தால், எளிதாக குணமாக்க முடியும் என்பதை செயல்படுத்த கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மார்பக பரிசோதனை முகாம்கள், தீபம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 2.88 லட்சம் பெண்களுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த 17 ஆண்டுகளாக இ–புக், மொபைல் போன் செயலிகள்/ இணையத்தளங்கள்/ இணைய பக்கங்கள்/ இணைப்புகள்/ பென் டிரைவ்/ யூடியூப் வீடியோக்கள்/ குறும்படங்கள்/ கையேடு வெளியீடு/ க்யூஆர் குறியீடுகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த மாதத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ இயக்குனர் டாக்டர் குகன், எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசாமி, ஆகியோர் இந்தநாளை துவக்கி வைத்தனர். புற்றுநோய் அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் கே கார்த்திகேஷ், மருத்துவமனையின் தலைமை செயல்பாடு பொது மேலாளர் பூர்ணிமா ராஜா, முதன்மை அதிகாரி ராம்குமார், மருத்துவமனையின் டீன் சுகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்

இதையொட்டி இளஞ்சிவப்பு வண்ண பொதுமக்களுக்கு 5,000 என்95 முக கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.இந்த முக கவசத்தில் இடம் பெற்றுள்ள க்யூஆர் குறியீட்டை மொபைல் போனில் ஸ்கேன் செய்தால், மார்பக புற்றுநோய் பற்றிய அனைத்து விபரங்களையும் இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.வழக்கம்போல இந்த ஆண்டும் இந்த மாதம் முழுவதும் சந்தேகப்படும் விதமாக இருப்பின் பெண்கள் மார்பக புற்றுநோய் பரிசோதனையை புற்றுநோய் மையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக பெறலாம்.

மார்பக புற்றுநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவு செய்ய நீங்கள் உதவ வேண்டும். புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் எங்களோடு இணைந்து செயலாற்றுங்கள்’ என, டாக்டர் பி.குகன் கூறினார்.

மேலும் விபரங்களுக்கு: 94428 44775, 0422 4389797

மேலும் படிக்க