• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக மக்கள் தொகை பெருக்கம் குறித்த விழிப்புணர்வு பேரணி

July 11, 2018 தண்டோரா குழு

உலக மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.

1987 ஆம் ஆண்டிலிருந்து இன்று உலக மக்கள் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மக்கள் தொகை கட்டுப்பாட்டை உலக நாடுகள் 1952 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய போது இந்தியாவிலும் இத்திட்டம் அறிமுகமாகியது.2001 முதல் 2011 உள்ள ஆண்டுகளில் இந்தியாவில் மக்கள் தொகை விகிதம் வெகுவாக குறைந்துள்ளது.கல்வி வளர்ச்சியில் பெண்கள் மற்றும் ஆண்கள் அதிகளவில் படித்துள்ளனர்.

மேலும் 1000 ஆண்களுக்கு 933 ஆக இருந்த பெண்களின் எண்ணிக்கை 2001 முதல் 2011 ஆம் ஆண்டு வரை 940 என அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் குடும்ப கட்டுப்பாடுகள் அதிகளவில் செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.நாம் இருவர் நமக்கு ஒருவர் என்னும் வாசகம் இந்தியர்கள் அனைவர் மனதிலும் நிறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க