• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக பேரிடர் தினத்தை முன்னிட்டு மீட்பு பணிகள் குறித்த ஒத்திக்கை நிகழ்ச்சி

October 13, 2020 தண்டோரா குழு

உலக பேரிடர் தினத்தை முன்னிட்டு மீட்பு பணிகள் குறித்த ஒத்திக்கை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக பேரிடர் தினத்தை பேரிடர் காலங்களில் மேற்கொள்ளபடும் பணிகள் குறித்த ஒத்திக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேரிடர் காலத்தில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளே சிக்கி உள்ளவர்கள் உயிருடன் இருக்கின்றனரா என்பதை கண்டறியும் கருவி,கான்கிரீட் கட்டர், டிரில்லர், தீயணைக்கும் உபகரணங்கள், தண்ணீரில் சிக்கியவர்களை காப்பாற்ற உபயோகிக்கும் மோட்டார் ரப்பர் படகு, ரோப் லேடர்,ஹைட்ராலிக் கட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கபட்டது.

இதில் அன்னூர்,கணபதி,பீளமேடு,
பொள்ளாச்சி,மேட்டுபாளையம் மற்றும் கோவை தெற்கு,வடக்கு,மத்திய தீயணைப்பு வீரர்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் கூறுகையில்,

தீயணைப்பு துறையினர் பணி மகத்தானது எனவும் பேரிடர் காலங்களில் தீயணைப்பு துறை வீரர்களின் தீவிர முயற்சியில் பல உயிர்கள் காப்பாற்றபட்டு உள்ளதாக தெரிவித்தார்.மேலும் சாதாரண பொருட்களை கொண்டு மீட்பு பணிகள் மேற்கொள்ள முடியும் என்பதை செயல் விளக்கம் மூலம் செய்து காண்பித்து உள்ளனர் என்றார்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்கள் சுரேஷ்,தனலிங்கம்
மாவட்ட ஆட்சியரிடன் நேர்முக உதவியாளர் (பொது) முத்துராமலிங்கம் வருவாய் துறை அலுவலர்கள் ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட உள்ளிட்ட ஏராளமானோர் ஒத்திக்கை நிகழ்வை ஆர்வத்துடன் பார்த்தனர்.

மேலும் படிக்க