• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக சாதனை புரிந்த சென்னை சிறுவனை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய ஆஸ்கார் நாயகன்

March 14, 2019 தண்டோரா குழு

அமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் இசை நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சிறுவனை வீட்டிருற்கு சென்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். பாராட்டினார்.

தலைச்சிறந்த திறமைகளுக்கான தேடுதல் நிகழ்ச்சியான “The World’s Best” நிகழ்ச்சியை அமெரிக்காவின் CBS தொலைக்காட்சி நடத்தியது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த திறமைகளில் தலைசிறந்ததை தேர்ந்தெடுக்கும் நோக்கில் கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. மொத்தம் நடத்தப்பட்ட 12 எபிசோட்களையும் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஜேம்ஸ் கார்டன் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்தும் கலைஞர்கள் குழுவாகவும், தனியாகவும் கலந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், சென்னையைச் சேர்ந்த பியானோ கலைஞரான சிறுவன் லிடியன் நாதஸ்வரமும் கலந்து கொண்டு பலரது பாராட்டுகளை பெற்றார்.
The World’s Best-இன் முதல் சீசனின் இறுதிப் போட்டி புதனன்று நடைபெற்றது.

The World’s Best பட்டத்திற்கான இறுதி சுற்றுத் தேர்வு தென்கொரியாவின் Kukkiwon எனும் தற்காப்புக்கலையை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்ற சாகச குழுவிற்கும், இசைக்கலைஞர் வர்ஷனின் மகனும், பியானோ இசைக்கலைஞருமான 13 வயது லிடியனுக்கும் இடையில் நிகழ்ந்தது. அப்போது, லிடியன் தனது அற்புதத்திறமையை வெளிக்காட்டும் விதத்தில் ஒரேநேரத்தில் இரண்டு பியானோக்களை வாசித்து அசத்தினார். இறுதிச்சுற்றில், ‘Wall of The World’ நடுவர் குழு அளித்த வாக்குகளின் அடிப்படையில் லிடியன் நாதஸ்வரம், The World’s Best பட்டத்தை வென்றதுடன், 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையையும் தட்டிச் சென்றார். இதனால் உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

இந்நிலையில், தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் இசை நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சிறுவனை வீட்டிருற்கு சென்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். பாராட்டினார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் அச்சிறுவனிடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

மேலும் படிக்க