• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக சாதனை படைக்க முயற்சி செய்தவர்க்கு தடை

April 11, 2017 தண்டோரா குழு

உயரமான சைக்கிள் ஓட்டி புதிய கின்னஸ் உலக சாதனை படைக்க முயற்சி செய்த நபரை முறையான அனுமதி பெறாத காரணத்தால் கியூபா நகரின் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கியூபா நாட்டை சேர்ந்த பெலிக்ஸ் குய்ரோலா(53) என்பவர் 7.5 மீட்டர் உயரமுடைய சைக்கிளை கியூபா நாட்டின் தலைநகர் கட்டடம் மற்றும் பிரபல சரடோகா விடுதி அமைந்துள்ள இடத்தில் சைக்கிள் ஓட்ட திட்டமிட்டிருந்தார்.

அவருடைய இந்த சாகசத்தை பார்க்க பார்வையாளர்கள் மற்றும் அவருடைய உலக சாதனை முயற்சியை சரிபார்க்க கின்னஸ் அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்திருந்தனர். ஆனால், காவல்துறையினரிடமிருந்து முறையான அனுமதி வாங்கவில்லை என்று கூறி, அவருடைய சாதனைக்கு காவல்துறையினர் தடை விதித்தனர்.

மேலும்,கின்னஸ் சாதனை புத்தகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 அடி உயரம் கொண்ட சைக்கிள் பயணமே இதுவரை சாதனையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க