• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ரோட்டராக்ட் சங்கம் 3201 சார்பில் வாகனப் பேரணி

December 2, 2019 தண்டோரா குழு

உலகெங்கும் டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வையும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் விதமாக கோவை ரோட்டராக்ட் சங்கம் 3201 சார்பில் வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இதில் சுமார் ஐம்பது இருசக்கர வாகனங்களும், 10 கார்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணி நடத்தினர். கோவை சாய்பாபா காலனியில் தொடங்கிய இந்த பேரணியானது வீரகேரளம், தொண்டாமுத்தூர், மாதம்பட்டி, ஆலந்துறை, வழியாக காருண்யா நகரை அடைந்தது. மேலும் செல்லும் வழியெங்கும் ஆங்காங்கே நிறுத்தி தெருக்கூத்து நாடகங்கள் மூலமாகவும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த வாகன பேரணியை Rtn.காட்வின் மரிய விசுவாசம் (மண்டலத் தலைவர்- இளைஞர் சேவை), Rtn.ஹென்றி அமல்ராஜ் மற்றும் மாவட்ட ரோட்டராக்ட் சங்கம் 3201 பிரதிநிதி அஜய் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த விழிப்புணர்வு வாகன பேரணி, ரோட்டராக்ட் சங்கம் 3201-குரூப்1 பிரதிநிதி கீர்த்தி விவேக் மற்றும் முகமது அப்சர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மேலும் படிக்க