• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக அமைதிக்காக 8 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கும் 1௦௦8 ஜெயின் துறவிகள்

July 19, 2017 தண்டோரா குழு

உலக சமாதானத்திற்காக 1௦௦8 ஜெயின் துறவிகள் 8 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.

ஜெயின் மத தலைவர் பிரவீன் ரிஷிஜீ உபதயா தலைமையின் கீழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுமார் 1௦௦8 ஜெயின் மத துறவிகள் உலக சமாதானத்திற்காக 8 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். இந்த உண்ணாவிரதம் ஜூலை 19ம் தேதி முதல் ஜூலை 24ம் தேதி வரை நடைபெறுகிறது.

உண்ணாவிரதத்தின் தொடக்க நாளில் சுமார் 2௦௦ துறவிகள் ஹைதராபாத் நகரில் நடக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு செல்வுள்ளனர். மற்ற 8௦8 துறவிகள் தாங்கள் வசிக்கும் இடத்தில் உண்ணாவிரதத்தை மேற்கொள்வர். அவர்கள் அனைவரும் இறுதிநாள் விழாவிற்கு ஹைதராபாத் நகரத்திற்கு வந்து சேர்வர்.

1௦௦8 துறவிகளில் 5௦௦ பேர் ஹைதராபாத் மற்றும் செகேண்டராபாத் நகரை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் இந்தியாவின் பல இடங்களிலிருந்து வருபவர்கள். இறுதி நாளில் நடைபெறும் விழாவிற்கு 23ம் தேதி சென்னையிலிருந்து விமானம் மூலம் ஹைதராபாத் நகருக்கு வந்து, அந்த விழாவில் கலந்துக்கொள்கின்றனர்.

உண்ணாவிரதத்தின்போது, சூரியன் அஸ்தமிக்கும் நேரம்வரை சுடு தண்ணீர் மட்டுமே குடிப்பர். அதற்கு பிறகு ஒன்றுமே குடிக்கமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க