• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகில் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து முதலிடம்

November 2, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவை சேர்ந்த போர்பஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில், ஜெர்மன் நாட்டின் தலைவர் ஏஞ்சலா மெர்கல் 7வது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்க நாட்டின் போர்பஸ் பத்திரிக்கை,சமீபத்தில் உலகில் சக்திவாய்ந்த 1௦௦ பெண்களை கொண்ட பட்டியலை வெளியிட்டது. அதன்படி, ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஏஞ்சலா மெர்கல் 7வது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அவரை தொடர்ந்து,பிரிட்டிஷ் பிரதமர் தெரிஸா மே இரண்டாவது இடத்திலும்,பில்கேட்ஸ் பவுண்டேஷன் தலைவர் மெலிண்டா கேட்ஸ் 3-வது இடத்திலும், ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஷெரீல் சாண்ட்பெர்க் 4-வது இடத்திலும், ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் மேரி பாரா 5-வது இடத்திலும் உள்ளனர். இதேபோல் அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் 19-வது இடத்திலும்,நடிகை பிரியங்கா சோப்ரா 97வது இடத்திலும் உள்ளனர்.

கடந்த ஆண்டு, அமெரிக்க நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் ஒபாமாவும் அவருடைய மனைவி மிச்சேல் ஒபாமாவும் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பிறகு, மிச்சேல் ஒபாமாவின் பெயர் அந்த பட்டியிலிருந்து நீக்கப்பட்டது. கடந்த 2௦16 உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியிலில் 2வது இடத்திலிருந்த ஹில்லரி கிளின்ட்டன் தற்போது 65வது இடத்தில் உள்ளார்.

மேலும்,இந்த பட்டியலில் உள்ள பெண்கள் பாதி பேர் அமெரிக்கர்கள், எட்டு பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள், மற்ற 13 பேர் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க