உலகின் வயது முதிர்ந்த பெண்மணி என்னும் பெருமையை ஜமைக்கா நாட்டின் வைலட் பிரவுன் என்னும் 117 வயது பெண்மணி பெற்றுள்ளார்.
மேற்கு ஜமைக்கா நாட்டின் துவான்வாலே என்னும் நகரில் வசித்து வரும் வைலட் பிரவுன் கூறுகையில்,
நான் வாழும் இந்த நீண்ட நாள் வாழ்க்கை கடவுள் எனக்கு தந்தது. என்னுடைய வாழ்வின் பாதி நாட்களை, என் வீட்டின் அருகிலுள்ள கரும்பு தோட்டத்தில் செலவிட்டேன். ஆலயத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். கோழி கறி மற்றும் பன்றி கறியை சாப்பிடுவதில்லை. என்னுடைய நீண்ட நாள் வாழ்க்கைக்கு கடின உழைப்பு தான் காரணம். கிறிஸ்துவ விசுவாமும் இதற்கு மற்றொரு காரணம். ஆலயத்தில் பாட பிடிக்கும். என்னுடைய குழந்தை பருவம் முதல் இந்த வயது வரை ஆலயத்தில் நேரம் செலவிடுவதை அதிகமாக விரும்புவேன்” என்று கூறினார்.
கடந்த 19௦௦ம் ஆண்டு மார்ச் 1௦ம் தேதி பிறந்த வயலெட் தற்போது தன்னுடைய 97வயது மகனுடன் வசித்து வருகிறார்.
உலகின் வயதான பெண்மணி என்று கருதப்பட்ட இத்தாலியைச் சேர்ந்த எம்மா மார்ட்டின் லூகியா மறைவுக்குப்பின் ஜமைக்கா நாட்டின் வைலட் பிரவுன் அந்த பெருமையைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்