• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகின் அதிக வயதான பெண்மணி எம்மா காலமானார்

April 17, 2017 தண்டோரா குழு

1800களில் இத்தாலி நாட்டில் பிறந்தவரும் உலகிலேயே அதிக வயதுடைய பெண்மணி என்று கருதப்பட்ட எம்மா மொரானோ(117) கடந்த சனிக்கிழமை(ஏப்ரல் 16) மதியம் அவருடைய வீட்டில் காலமானார்.

1899ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி எம்மா பிறந்தார். எம்மாவின் பெற்றோரின் 8 குழந்தைகளில் மூத்த மகள் ஆவார். 1926ம் ஆண்டு கியோவானி மார்டினுசி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். 1937ம் ஆண்டு அவர்களுக்கு ஒரு அழகிய ஆண் மகன் பிறந்தான். ஆனால் பிறந்த சில மாதத்திற்குள் அந்த குழந்தை இறந்துவிட்டது. அடுத்த ஆண்டே அவருடைய கணவரை பிரிந்தார். ஆனால் விவாகரத்து செய்யவில்லை.

கணவரை பிரிந்த அவர் ஒரு சணல் தொழிற்சாலையிலும் போர்டிங் பள்ளியின் சமையலறையிலும் பணிபுரிந்த அவர், தனது 75வது வயதில் ஓய்வு பெற்றார். அவருடைய சகோதர சகோதரிகள் அவருக்கு முன் இறந்துவிட்டனர்.

எம்மா உயிருடன் இருந்தபோது அளித்த பேட்டியில்,

“காலை உணவிற்கு தண்ணீர் அல்லது பாலோடு பிஸ்கட் சாப்பிடுவேன். சிறிது நேரத்திற்கு பிறகு, என்னுடைய 2௦வது வயதில் மருத்துவர்கள் கொடுத்த ஆலோசனைபடி,பச்சை முட்டை ஒன்றையும் சமைத்த முட்டை ஒன்றையும் சாப்பிடுவேன். மதிய உணவிற்கு பாஸ்தா மற்றும் கொத்து கறி சாப்பிடுவேன். இரவு ஒரு டம்பளர் பால் மட்டும் குடிப்பேன். தூக்கம் மிகவும் அவசியம் என்பதால் இரவு 7 மணிக்கு முன் தூங்கச் சென்று காலை 6 மணிக்கு முன் எழுந்துவிடுவேன். இது தான் என்னுடைய நீண்ட நாள் வாழ்க்கைக்கு ரகசியம்” என்று தெரிவித்திருந்தார்.

அவருடைய மருத்துவர் டாக்டர் கார்லோ பாவா கூறுகையில்,

“வட இத்தாலியின் வெர்பானியா நகரிலுள்ள அவருடைய வீட்டின் ஆடும் நாற்காலியில் அமர்ந்தவாறு உயிரிழந்தார். அவர் அதிக கஷ்டப்படாமல் அமைதியான முறையில் காலமானார்” என்றார்.

மேலும் இரண்டு உலகப்போர்களை பார்த்துள்ள எம்மா மொரானோ, ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க