• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகளவில் இந்திய பாஸ்போட்டிற்கு கிடைத்த புதிய அங்கீகாரம்

February 23, 2019 தண்டோரா குழு

உலகில் உள்ள 199 நாடுகளின் பாஸ்போர்ட்கள் தர வரிசைப்படுத்தப்படுகிறது. இந்த பட்டியலில் அதிகமாக வெளிநாட்டிற்கு பயணிப்பவர்கள் அதிகமாக வெளிநாட்டிற்கு பயணிக்கும் மக்கள், ஒரு நாட்டின் மக்களை விசா இல்லாமல் அனுமதிக்கும் நாடுகளின் எண்ணிக்கை, ஆன் அரைவல் விசா வழங்கும் நாடுகளின் எண்ணிக்கை ஆகியவற்றை வைத்து இந்த தரவரிசை பட்டியலிடப்படுகிறது.

இதில் கடந்த 2015ம் ஆண்டு தரவரிசையில் 77 வது இடத்தில் இந்திய பாஸ்போர்ட் இருந்தது. கடந்தாண்டு 68 வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது 67 வது இடத்தில் உயர்ந்து இருக்கிறது. இந்திய மக்கள் விசா இல்லாமல் வந்து செல்ல 25 நாடுகள் அனுமதிக்கின்றன. அவர்கள் அந்த நாட்டிற்கு செல்ல இந்தியாவின் பாஸ்போர்ட் இருந்தால் மட்டும் போதும். மேலும் 39 நாடுகள் ஆன் அரைவல் விசா எனப்படும் அந்த நாட்டிற்கு சென்று அங்கு தான் இந்திய குடிமகன் என்ற ஆவணத்தை சமர்பித்தாலே அவர்களுக்கு விசா வழங்கப்படுகிறது. இவை ஒரு நாட்டு மக்களின் மூலம் அந்த நாட்டிற்கு அதிக வருமானம் வரும்பட்சத்தில் தான் வழங்கப்படும்.

இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று அதிகம் செலவு செய்வது அந்நாட்டின் வருமானத்திற்கு வழி வகுப்பதால் இந்த சலுகைகள் அந்நாடுகளால் இந்தியா மக்களுக்கு வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்தியா தங்களது பல தடைகளை தளர்த்தியுள்ளது அவர்கள் இந்திய சுற்றுலா பயணிகள் நுழைவதில் இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க