September 7, 2020
தண்டோரா குழு
உயிர் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் நிறுவனத்தை தொடங்க கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் செட்டிபாளையம் ஒராட்டு குப்பை கிராமத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருப்பிடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மருத்துவ கழிவுகளை சுத்திகரிக்கும் ஆலையை கோவை பயோ வேஸ்ட் கழிவு மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிட்டெட் சார்பாக தொடங்கப்பட இருக்கிறது.இந்த ஆலை தொடங்கப்பட்டால்,காற்று,நிலத்தடி நீர் மாசுபடுவதோடு ஆஸ்துமா, மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பாதிப்படைய வாய்ப்பாக இருக்கும்.இப்பகுதி மக்கள் நிலத்தடி நீரைத்தான் குடிநீராக பயன்படுத்தி வருவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டல் வாழ முடியாது சூழல் உருவாகும் என தெரிவித்தனர்.
புதிதாக தொடங்க இருக்கும் இந்நிறுவனத்தை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.இந்நிறுவனத்தினர் இங்குள்ள மக்களை தொடர்புகொண்டு உயிர் கழிவுகளை மறு சுழற்சி செய்தால் ஒன்றும் பிரச்சனை வராது என கூறுவதாகவும், பல கோடி செலவில் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள தாகவும்,இப்பகுதி மக்களுக்கு உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளதாக கூறினர்.