• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உயிரை பலி வாங்கிய கத்தி விளையாட்டு!

April 28, 2017 தண்டோரா குழு

பொதுமக்கள் முன்பு கத்தி வைத்து சாகசம் செய்தவர், தவறுதலாக கத்தி குத்தியதில் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தைச் சேர்ந்த தெப்ரிட் பாலி (25), சியாங் மை என்னும் இடத்தில் இறந்த முன்னோர்களின் ஆவிக்கு மரியாதை செலுத்த, பார்வையாளர்கள் முன் நடனமாடி மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தார். சில சாகச நிகழ்சிகளை நடத்தும் விதமாக, ஒரு நீண்ட கத்தியால் தனது இதயத்தை குத்தினார். அந்த கத்தி இரண்டாக உடைந்துவிட்டது. இதை கண்ட பார்வையாளர்கள் ஆச்சரியமடைந்தனர்.

மறுபடியும் கத்தியை எடுத்து அவருடைய விலா பகுதியில் வேகமாக அழுத்தியபோது, கத்தி இருதயத்தில் ஆழமாக சென்றுள்ளது. இருதயத்திலிருந்து ரத்தம் வெளியாக தொடங்கி துடிதுடித்து கீழே விழுந்த பாலியை, அங்குள்ளவர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு சென்றானர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு வரும் முன்னே இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் வசித்த நூம் உடார்ன் என்பவர் கூறுகையில்,

“பல ஆண்டுகளாக உள்ளூர் மக்களுக்கு ஜாதகம் சொல்லிக்கொண்டு வந்தார் தெப்ரிட். பொதுவாக அவர் செய்த சாகசனத்தின்போது, கத்தி உடைவது வழக்கம். ஆனால், இந்த முறை இந்த விளையாட்டு வினையாகிவிட்டது. பாலியை மக்கள் மிகவும் நேசித்தனர்” என்றார்.

துணை காவல்துறை ஆய்வாளர் சைவத் ப்ஹான் கூறுகையில்,

“ஒரு மனிதன் தான் வைத்திருந்த கத்தியைக் கொண்டு தன்னை தானே குத்திக்கொண்டான் என்ற தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்தோம். ரத்த வெள்ளத்திலிருந்த பாலியை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர். உடனே, நாங்கள் மருத்துவமனைக்கு சென்றபோது, பாலி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். அவருடைய இருதயத்தில் கத்தி குத்தால் ஏற்பட்ட காயம் இருந்தது. பாலியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் படிக்க